மன்னார் ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டில் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட பங்குத்தந்தை.
மன்னார் மடு பிரதேச செயலக பிரிவில் உள்ள கோவில் மோட்டை காணி பிரச்சினை தொடர்பாக கோவில் மோட்டை கத்தோலிக்க விவசாயிகள் மற்றும் மடு தேவாலயத்திற்கு இடையில் காணப்பட்ட பிரச்சினை தொடர்பாக உண்மை செய்திகளை வெளியிட்ட ஊடகவியளாலருக்கு மடு பகுதியில் கடமையாற்றும் கத்தோலிக்க மத குரு ஒருவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதுடன் குறித்த ஊடகவியளாலரின் வீட்டுக்கு அடியாட்களுடன் சென்று அடவாடித்தனத்திலும் ஈடுபட்டுள்ளார்.
மடு கோவில்மோட்டை விவசாய காணி தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இடம் பெற்று வருகின்ற நிலையில் நேற்றைய தினம் விவசாய காணிகளை உழவு செய்ய முற்பட்ட சமயம் கோவில் மோட்டை விவசாயிகளுக்கும் குறித்த மதகுரு தலைமையிலான குழுவினருக்கும் முரண்பாடு ஏற்பட்டநிலையில் குறித்த செய்தியை ஊடகவியலாளர் அறிக்கையிட்டதுடன் சம்பவம் தொடர்பாக மடு தேவாலயத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு குறித்த மத குருவிடம் கோரியுள்ளார்.
ஆனாலும் மத குரு விளக்கம் கொடுக்க மறுத்த நிலையில் தன்னால் சேகரிக்கப்பட தகவலின் அடிப்படையில் குறித்த செய்தியை அறிக்கையிட்டுள்ளார் செய்தி வெளியாகிய நிலையில் பிரச்சினையுடன் சம்மந்தப்பட்ட மதகுரு தொலைபேசி ஊடாக குறித்த ஊடகவியலாளரை அச்சுறுத்தும் விதமாக பேசியதுடன் தான் யார் என்பதை காட்டுவேன் எனவும் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
தொலைபேசியில் அச்சுறுத்தியதுடன் நிறுத்தாமல் இன்று இரவு ஊடகவியளாலர் இல்லாத நேரத்தில் அவருடைய வீட்டை சில அடியாட்களுடன் சுற்றிவளைத்ததுடன் வீட்டின் மீது கற்களை வீசியுள்ளனர்.
விடயம் அறிந்து அப்பகுதி மக்கள் ஒன்று திரண்ட நிலையில் அக்குழுவினர் ஓடி ஒளிந்துள்ளனர் இவ்வாறு அச்சுறுத்தல் செயற்பாட்டில் ஈடுபட்ட மதகுரு மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட ஊடகவியளாலரால் மடு பொலிஸில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Post a Comment