பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள ஆசிரியர் ஒருவரின் மரணம்.
மட்டக்களப்பு வாழைச்சேனையை பிறப்பிடமாகவும் நொச்சிமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல தமிழ் ஆசிரியரான ஆரியநந்தா கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்றைய தினம் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
இறுதியாக இவர் காக்தான்குடி நகரசபையில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடமையாற்றியிருந்தார் எனவும் தெரியவந்துள்ளது.
இவரது மரணம் கல்விச் சமூகத்திற்கு பேரிழப்பு என்பதுடன் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment