வடக்கில் நாளை முதல் இடம்பெறவுள்ள செயற் திட்டம்.
வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் 20 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும், நாளை முதல் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
தடுப்பூசி வழங்கும் நிலையங்கள் பற்றிய விவரங்கள் அப்பிரதேசத்திற்குரிய சுகாதார மருத்துவ அதிகாரியினால் வெளியிடப்படும் நிலையில் குறித்த தடுப்பூசி வழங்கும் நிலையங்களில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான முதலாவது, இரண்டாவது தடவைக்கான தடுப்பூசிகளும் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment