Header Ads

test

இளம் குடும்ப பெண் எடுத்த விபரீத முடிவு.

 முல்லைத்தீவு மாவட்டத்தின் கொல்லவிளாங்குளம் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (20) காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் இனம் காணப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மல்லாவி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவனை பிரிந்த நிலையில் இரண்டு பிள்ளைகளுடன் ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றிவரும் 32 அகவையுடைய பிரதீபன் புஸ்பராணி எனும் இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை மற்றும் பி.சி.ஆர் முடிவுகளின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments