Header Ads

test

காணாமல் ஆக்கப்பட்டவர்களை இலங்கை அரசு கொலை செய்துவிட்டதா என பகிரங்கமாக கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.

 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இறப்புச் சான்றிதழை வழங்கவுள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச கூறியதன் மூலம், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுவிட்டார்களா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறிலங்கா அரச படையினரால் கைது செய்யப்பட்டவர்களும் அவர்களிடம் கையளிக்கப்பட்டவர்களுமே இன்று காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை வெளிப்படுத்த வேண்டுமெனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளதுடன் அண்மையில் இடம்பெற்ற சிறைச்சாலை சித்திரவதைச் சம்பவம் குறித்தும்  கடுமையான கருத்துக்ளை தெரிவித்தார்.


No comments