ஊரடங்கு தொடர்பில் சற்று முன் வெளிவந்த தகவல்.
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டில் தொடர்ந்தும் ஊரடங்கை அமுல்படுத்துவதா, இல்லையா என்பது குறித்து கொவிட் தேசிய செயலணி தொடர்ச்சியாக கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தது.
குறித்த கொவிட் தேசிய செயலணியின் தீர்மானங்களை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல டுவிட்டர் பக்கத்தின் ஊடாக சற்று முன்னர் நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார்.
இதன்போது நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை 21 ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்
.
Post a Comment