கொழும்பை அண்மித்த கடற்கரையோரங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை உண்மையா.
கொழும்பில் சில கரையோர பகுதிகளில் மக்கள் மத்தியில் சுனாமி அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குறிப்பாக கல்கிஸை, அங்குலான பிரதேசங்களில் இவ்வாறு பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அங்குலானை பகுதியில் சுனாமி ஏற்பட்டுள்ளதாக பரவி வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என அங்குலானை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடல் சற்று சீற்றம் அதிகரித்து காணப்படும் என தமக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளதாக பொலிஸார் கூறினர். எனினும், சுனாமி ஏற்படும் என கூறப்படும் செய்தி போலியானது எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
கடல் சீற்றம் அதிகரித்துள்ள நிலையில், சுனாமி ஏற்படுவதாக வதந்திகள் பரவி வருகின்ற நிலையிலேயே, பொலிஸார் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.
Post a Comment