தந்தையின் புல்லுவெட்டும் இயந்திரத்தில் சிக்கியதால் சிறுமிக்கு நேர்ந்த துயரம்.
புல் வெட்டிக் கொண்டிருந்த இயந்திரத்தில் சிக்கி 3 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.
இச்சம்பவம் நேற்று மாலை புத்தளம் - பள்ளம, சேருகெலே பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
தந்தை புல் வெட்டிக் கொண்டிருந்த இடத்திற்கு சென்ற குழந்தை குறித்த டிராக்டர் இயந்திரத்தில் சிக்கி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எனினும் வைத்தியசாலை கொண்டு செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த இயந்திரத்தை இயக்கிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பள்ளம பொலிஸர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment