வவுனியாவில் சடுதியாக அதிகரித்துள்ள கொவிட் தொற்று.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 53 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 50 பேர், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர், செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் ஒருவர் என 54 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 499,972 ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment