நீர் கொழும்பில் மீன் பிடிக்கச் சென்ற நபர் மாயம்.
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடலுக்கு சென்ற மீனவர் இருவர் படகு கவிழ்ந்து காணாமல் போயுள்ளனர்.
குறித்த இருவரும் நேற்று காலை சிறிய படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.
காணாமல் போனவர்கள் 61 மற்றும் 60 வயதுடையவர்கள் எனவும் நீர்கொழும்பில் வசிப்பவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர்களை, கடற்படை மற்றும் நீர்கொழும்பு பொலிஸார் ஆகியோர் இணைந்து தேடி வருகின்றனர்.
Post a Comment