Header Ads

test

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய கொவிட் மரணம் - கணவன் மனைவி இருவரும் மரணம்.

 யாழில் கணவன் - மனைவி இருவரும் கொரோனாவுக்கு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாவகச்சோி - நுணாவில் பகுதியில் கொரோனா தொற்றினால் மனைவி உயிரிழந்து ஒரு வாரத்தில் கணவனும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

கடந்தவாரம் 87 வயதான வயோதிப பெண்மணி கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அவருடைய சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அவருடைய சடலம் தகனம் செய்யப்படும் என தெரியவருகின்றது.

இந்த நிலையில் 97 வயதுடைய அவருடைய கணவரும் இன்று காலை உயிரிழந்திருப்பதாக குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றினால் கணவனும் மனைவியும் உயிரிழந்த முதலாவது சம்பவம் இது என தெரியவந்துள்ளது.


No comments