ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை.
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவித்தலை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ளது.
அதன்படி காலி, இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் மத்திய நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.
Post a Comment