Header Ads

test

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் வெளிவந்துள்ள புதிய வழிகாட்டல்.

 பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டு பின்னர் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது அவசியமாகும்.

இதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக உலகளாவிய ரீதியில் எடுக்கப்படுகின்றன நடவடிக்கைகள் பற்றி ஜனாதிபதி தலைமையிலான கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவலை தடுப்பதற்கான செயலணி தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

No comments