பிக்குவால் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்.
மட்டக்களப்பு புன்னைக்குடா விஹாரையில் பிக்குவாக படிப்பதற்காக தங்கி இருந்து 11 வயது சிறுவனுடன் தகாத முறையில் நடந்துகொண்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட விஹாரையின் பிரதம பிக்குவை எதிர்வரும் 22ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதிவான் நேற்று (08) உத்தவிட்டுள்ளார்.
குறித்த விஹாரையில் பிக்குவாக படிப்பதற்காக தங்கி இருந்து வந்த 11 வயது சிறுவனிடம் தகாத முறையில் நடந்துகொண்ட விஹாரையின் பிரதம பிக்கு வை கடந்த மாதம் 25ம் திகதி பொலிஸார் கைது செய்து ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை இன்று 8ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதிவான் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது கொரோனா காரணமாக அவர் நீதிமன்றில் அழைத்துவரப்படாத நிலையில் கணொளி மூலம் அவரை எதிர்வரும் 22ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
Post a Comment