மனைவியை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்த கணவன்.
கெஸ்பேவ – படுவந்தர பகுதியில் நபரொருவர் மனைவியை கொலை செய்து, தானும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மனைவியின் தகாத உறவு காரணமாக இவ்வாறு கணவனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் வசித்துவந்த வீட்டில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதற்கமைய கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் வீட்டின் அறையொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அத்துடன், தற்கொலை செய்துக்கொண்ட கணவரால் எழுதப்பட்டதாக கருதப்படும் கடிதம் ஒன்றையும் வீட்டில் இருந்து பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
சம்பவத்தில் குறித்த பகுதியை சேர்ந்த 39 வயதான ஆணும், 28 வயதான பெண்ணொருவருமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment