லண்டன் முதல் ஜெனிவா வரையான மிதிவண்டிப் பயணம் ஏழாம் நாளாகவும் தொடர்கிறது.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் கொடுமைகளுக்கும் அனைத்துலக விசாரணை கோரும் பரப்புரை செயற்பாடுகள் புலம்பெயர் நாடுகளில் இன்றும் நடத்தப்பட்டுள்ளன.
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் லண்டன் முதல் ஜெனிவா வரையிலான மிதிவண்டி பயணம் இன்று தனது ஏழாம் நாள் பயணத்தை கடந்துள்ளது.
தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணைகோரி நடத்தப்பட்டுவரும் இந்தப்பயணம் பிரித்தானியா,நெதர்லாந்து ஆகிய நாடுகளின் ஊடாக பயணம் செய்து இன்று பெல்ஜிய நகரங்களை கடந்துள்ளது.
இதேபோலவே பிரான்சில் உள்ளுராட்சி கட்டமைப்புகளை சந்தித்து தமிழினத்துக்கு நீதிகோரும் பரப்புரை செயற்பாடுகள் இன்று எட்டாவது நாளாக இடம்பெற்றிருந்தன.
தமிழ்பண்பாட்டு வலையம் மற்றும் அனைத்துலக உரிமை சங்கம் ஆகிய அமைப்புகளின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் இந்தப்பயணத்தில் தமிழினப் படுகொலைக்குரிய சாட்சியப்பதிவுகள் காட்சிப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment