Header Ads

test

பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்துள்ள ஜனாதிபதி.

 அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்துள்ளார். இது குறித்த வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய துறைமுக அதிகாரசபையால் முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து சேவைகள் மற்றும் அனைத்து எரிபொருட்களின் விநியோகம் தொடர்பில் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 அத்துடன் புகையிரத திணைக்களம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையினால் முன்னெடுக்கப்படும் அனைத்து பொது சேவைகள், அத்தியாவசிய பராமரிப்பு மற்றும் செயற்பாடுகள் என்பன அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்தியாவசிய சேவைகளில் அனைத்து மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராம அலுவலர்கள், சமுர்த்தி அதிகாரிகள் மற்றும் விவசாய அதிகாரிகள் உட்பட அனைத்து கள நிலை அலுவலர்களின் சேவைகளும் இதில் அடங்கும்.

இவ்வர்த்தமானி அறிவிப்புக்கு அமைய இலங்கை மத்திய வங்கி உட்பட அனைத்து அரச வங்கி மற்றும் காப்புறுதி சேவைகள், சுகாதார சேவைகள், கூட்டுறவு மொத்த விற்பனை சேவைகள் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை இவற்றுக்கு மேலதிகமாக தபால் சேவைகள் மற்றும் மாகாண சபைகளின் கீழ் உள்ள அனைத்து அரச அலுவலகங்களும் செய்ய வேண்டிய சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments