Header Ads

test

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் சுக்குநூறாகிய முச்சக்கரவண்டி.

 கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் பாரியவிபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று மாலையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த சிறிய ரக பேருந்தும் கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியுமே விபத்துக்குள்ளாகியுள்ளன.

சிறிய ரக விசேட சேவை பேருந்து யாழ்நோக்கி பணியாளர்களை ஏற்றிச் சென்றுள்ள போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.  கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து பேருந்துடன் மோதியுள்ளது.

இந்த விபத்தின் போது முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்துள்ளது. மேலும் முச்சக்கர வண்டி சாரதி பலத்த காயங்களுக்குள்ளானதுடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







Gallery Gallery

No comments