பொலிஸாரின் கைகளை கடித்த நபர் கைது.
மாத்தறை, கந்தர பிரதேசத்தில் கைதுசெய்ய முயன்ற பொலிஸ்அதிகாரிகள் இருவரின் கைகளை கடித்த நபரை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் காயமடைந்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் தலல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொலை வழக்கொன்றின் சாட்சியாளர் ஒருவருக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக கடந்த 25 ஆம் திகதி கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய, குறித்த சாட்சியாளரின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபர் வாளுடன் அங்கு வருகைத் தந்த நிலையில் அவரை கைது செய்ய முயன்ற அதிகாரிகளின் கைகளை கடித்து அவர் தப்பிக்க முயன்றுள்ளார். இதனையடுத்து. பொலிஸ் அதிகாரிகள் அவரை மடக்கிப்பிடித்து கைதுசெய்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment