மது போதையில் பேருந்தை செலுத்தியதால் இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி.
திருத்தப்பணி சேவை பஸ் மோதியதில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி பெனிசுதுவ பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சரத்குமார பியதாஸ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நாவலப்பிட்டியிலிருந்து கினிகத்தேனை பகுதியை நோக்கிச் சென்ற நாவலப்பிட்டி டிப்போவிற்கு சொந்தமான திருத்தப்பணி சேவை பஸ் கினிகத்தேனை அனுரத்த பிரத்தமிக்க வித்தியாலத்திக்கு அருகில் குறித்த நபர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
Post a Comment