Header Ads

test

மனைவி இறக்க முன்னரே இறுதிச் சடங்கிற்காக மலர்ச்சாலைக்கு பணம் செலுத்திய வர்த்தகர்.

கொரோனா தொற்றுக்குள்ளான தனது மனைவியைத் கொன்று வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யத் தயாரான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சொத்துக்களைப் பெற்றுக்கொண்டு பின்னர் மறுமணத்துக்கு வர்த்தகர் ஒருவர் தயாரானதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனைவியைத் தாக்குவதற்காகப் பயன்படுத்திய கத்தி, தலையணை மற்றும் படுக்கை விரிப்புகளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்னர்.

குறித்த தம்பதிக்கு 13 வயது மற்றும் 06 வயதான குழந்தைகள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுமட்டுமன்றி மனைவி உயிரிழக்க முன்னரே மலர்சாலைக்குச் சென்று இறுதிச் சடங்கு மேற்கொள்வதற்கான பணத்தைச் செலுத்தியுள்ளமை பொலிஸார் மேற்கொண்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.


No comments