Header Ads

test

மனிதன் கூர்ப்படையாமல் குரங்கே கடைசியாக இருந்திருக்கலாம் - மதிவதனி குருச்சந்திரநாதன்.

இறைவன் படைப்பில் ...


மனிதன்
அவன் மட்டும்
இறைவன் படைப்பில்
இல்லாத ஓர் கணக்கெனில்
இந்த பூமி வாழ்ந்திருக்கும்

இழவு வீடு தன் வீட்டில் நடக்க
மாற்றான் தாயின் மகப்பேறிற்கு
நலன் விசாரிக்க செல்கிறான்
இந்த மனிதன்

உண்மை தான்
மனிதன் கணக்கில்
மாண்டுகொண்டிருப்பது
ஒன்று
பூமி
இன்னொன்று
மனிதன்

மனிதன் கூர்ப்படையாமல்
குரங்கே கடைசியாக இருந்திருக்கலாம்
அழிந்தவை அழிகின்றவை அழியப்போகின்றவை எல்லாம் அழியாதவையாக இருந்திருக்கும்

மனிதனுக்கு நாகரிகம் என்ற பண்பாட்டை படைக்காமலே இருந்திருக்கலாம்
காட்டுக்குள் மனிதன் வாழும் வரைக்கும்
இந்த பூமிக்கு  எந்த சேதமும் இல்லை
வீட்டிற்குள் மனிதன் எப்போது நுழைந்தானோ
அன்றுமுதல்
பூமிக்கு நேராத சேதம் என்றெதுவுமில்லை

மனிதனுக்கு மட்டும்
தனியே ஒரு கண்டத்தை படைத்து இருக்கலாம்
அதில் அவனை மட்டும் தனியே வாழவைத்திருக்கலாம்
மரமும் உட்பட  மண்ணும்
தண்ணீரும் காற்றும் ஆகாயமும்
அவன் வாழ்வதற்கு ஒவ்வாதவையாக 
இருந்திருக்கலாம்

மனிதனுக்கு மட்டும்
உணவு
உடை
உறையுள்
இந்த மூன்றையும் அத்தியாவசியப்படுத்தாமல் இருந்திருக்கலாம்
அநாவசியமாக
கண்ணீரும் செந்நீரும்
சிந்தாமல் இருந்திருப்பான்
இல்லை
இறந்திருப்பான்

மனிதனுக்கும்
பொதுவான ஒரு மொழி கொடுத்திருக்கலாம்
சிவப்பு ஆட்டுக்கு ஒரு மொழி
கறுப்பு ஆட்டுக்கு ஒரு மொழி
செம்மறி ஆட்டுக்கு ஒரு மொழி
என்றில்லை
அவ்வாறே
மனிதனுக்கும்
ஒரு மொழி கொடுத்திருக்கலாம்
கொஞ்சமாவது தன் பாஷை - கற்று நடந்திருப்பான்

தன் இனத்தில் ஒன்று மரித்துப்போனதற்காக
ஏனையவை அஞ்சலி மட்டுமே செய்யும்
அடக்கம் செய்யாது
மனிதனும்
அவ்வாறே இருந்திருக்கலாம்
அடக்கம் செய்வதற்காகவே
மீண்டும் மீண்டும் மனிதனை
கொல்லாதிருந்திருப்பான்

இவ்வாறே
மனிதனிற்கு சிந்திக்கும் ஆற்றலை கொடுக்காமலே இருந்திருக்கலாம்
சில காலத்திற்காவது
அவன் நிம்மதியாக
வாழ்ந்திருப்பான்
இன்னொன்று
நிம்மதியாக
வாழவிட்டிருப்பான்

இறுதியாக
இறைவன்படைப்பில் மனிதன் - என்று
மனிதன் தன்னை தானே சொல்லுவதை
சொல்லாமல் செய்திருக்கலாம்
செய்வதையெல்லாம் செய்துவிட்டு
இன்னொருவர் மீது பழிபோடுவதை
பழக்கப்படுத்தியதிலிருந்து
நிறுத்தியிருப்பான்.

மதிவதனி குருச்சந்திரநாதன்
சட்டக்கல்லூரி மாணவி
கொழும்பு பல்கலைக் கழகம்.

No comments