காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடி அலைந்த தந்தைக்கு நேர்ந்த துயரம்.
வவுனியா - மதியாமடு, புளியங்குளம் எனும் முகவரியில் வசித்து வந்த, காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனுக்கு நீதி கேட்டுப் போராடிய செபமாலை இராசதுரை, தனது மகன் பற்றிய உண்மை நிலை ஏதும் அறியாமலேயே இன்று உயிரிழந்துள்ளார்.
2009ம் ஆண்டு இறுதி யுத்த முடிவின் போது 2009.05.24 அன்று ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்து இராணுவத்தினர் இவரது மகனான இராசதுரை விஜி என்பவரை கைது செய்து, குடும்பத்தினரிடமிருந்து தனியாக பிரித்து அழைத்துச் சென்றிருந்த நிலையில், கடந்த 12 ஆண்டுகளாக மகனை தேடி வந்துள்ளார்.
வவுனியாவில் 1,668 நாட்கள் கடந்தும் நடைபெற்று வரும் "காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கேட்கும் தொடர் போராட்டத்தில்" செபமாலை இராசதுரை தன்னை இணைத்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில், தனது மகன் பற்றிய உண்மை நிலை ஏதும் அறியாமலேயே இன்று உயிரிழந்துள்ளார்.
Post a Comment