வாகனத்தை சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.
வவுனியா – குடாகச்சக்கொடிப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாடுகளை கடத்திச்சென்ற இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொறவப்பத்தானையில் இருந்து வவுனியா நோக்கிவருகைதந்த கப்கரக வாகனத்தினை, குடாக்கச்சக்கொடிப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் சோதனைகளை முன்னெடுத்தனர். இதன்போது குறித்த வாகனத்தினுள் சட்டவிரோதமான முறையில் மாடுகள் கடத்திச்செல்லப்பட்டமை தெரியவந்தது.
இதனையடுத்து குறித்த வாகனத்தில் இருந்த நபர்களை கைதுசெய்த விசேட அதிரடிப்படையினர், கடத்தலுக்கு பயன்படுத்திய கப்ரக வாகனத்தினையும் மாடுகளையும் மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment