கொவிட் தொற்று காரணமாக மேலும் ஒரு வைத்தியர் பலி.
ஆனமடுவை பிரதேச மேலதிக சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் வசந்த ஜயசூரிய கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த வைத்தியர் கடவத்தையில் வசிக்கும் இரு பிள்ளைகளின் தந்தையான ஜெயசூர்ய என தெரியவந்துள்ளது.
நீர்கொழும்பு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சில காலம் பணியாற்றி வந்த அவர், அதன் பின்னர் ஆனமடுவ சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் சுமார் 10 நாட்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அவர் அங்கொட கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிற்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment