யாழிலிருந்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டதன் காரணம் என்ன.
யாழ்.தெல்லிப்பழையில் இடம்பெறும் மத மாற்றச் செயற்பாடுகள் தொடர்பாக மறவன்புலவு சச்சிதானந்தன் கலாச்சார அமைச்சருக்கு அனுப்பியிருந்த எழுத்துமூல கடிதம் ஜனாதிபதியின் கவனத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தேசிய மரபுரிமைகள் அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பகலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
அவரது கடிதத்தில் மறவன்புலவு சச்சிதானந்தன் அனுப்பிய கடிதத்தின் பிரகாரம் தெல்லிப்பழையில் இடம்பெறும் மதமாற்ற செயற்பாடுகளினால் அங்குவாழும் மக்கள் அசௌகரியத்திற்கு உள்ளாவதால் அதனை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு எனக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
எனவே குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர், , ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Post a Comment