Header Ads

test

வடக்கில் உடனடியாக அமைக்கப்படவுள்ள பல மின் மாயானங்கள்.

  வடக்கு மாகாணத்தில் உடனடியாக மேலும் 6 மின் தகன மயானங்கள் அமைப்பதற்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அனுமதி வழங்கியுள்ளார்.

வடக்கில் கொரோனா தொற்று காரணமாக அதிக மரணங்கள் ஏற்படும் நிலையில் , சடலங்களை எரிப்பது தொடர்பில் ஏற்படும் நெருக்கடிகள் தொடர்பில் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் ரஞ்சன் தலைமையில் நேற்றைய தினம் அவசரமாக ஆராயப்பட்டது.

இதன்போது தற்போது யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் மட்டுமே மின் தகன மயானங்கள் உள்ளதனால் வடக்கில் தினமும் இடம்பெறும் மரணங்களின் எண்ணிக்கைக்கு ஈடு கொடுக்க முடியாமல் உள்ளதனால் அவசரமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இதன்போதே குறித்த விடயத்திற்கு தீர்வாக மாகாணத்தில் மேலும் 6 தகன மயானங்களை அமைக்க 6 உள்ளூராட்சி சபைகளுற்கு அனுமதி வழங்கியதுடன் நிதி வல்லமை மற்றும் திட்ட விருப்பம் இருந்தால் இந்த 6 சபைகள் பணியை உடன் முன்னெடுக்கலாம் எனவும்    தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வலி. வடக்கு, வலி. தெற்கு, நல்லூர் ஆகிய பிரதேச சபைகளுக்கும் சாவகச்சேரி நகர சபைக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச சபைக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துரைப்பற்று பிரதேச சபைக்கும், மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபைக்கும் இந்த அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments