இணையவழி கற்கையால் சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம் - 18 வயது மாணவி கைது.
நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் இணைய வழி கற்கையில் ஈடுபட்ட மாணவியொருவர், ஆபாச வலைத்தளங்களிற்கு அடிமையாகி, அயல்வீட்டிலுள்ள 15 வயதான மாணவனுடன் தவறாக நடந்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் மாத்தறை, திக்வெல்ல பகுதியில் நடந்தேறியுள்ளது.
குறித்த மாணவி தற்போது கைது செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அங்குள்ள பாடசாலையொன்றில் உயர்தரம் கற்கும் 18 வயதான மாணவியொருவரே இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
இணைய வழி கற்கையில் ஈடுபட்ட மாணவி, வயது வந்தோர் தளங்களிலுள்ள காணொளிகளை பார்த்து காணொளிகளில் இடம்பெற்ற காட்சிகளை போல செயற்பட்ட முயற்சித்துள்ளார்.
மாணவன் அதற்கு இடமளிக்காத போதும், மாணவி வலுக்கட்டாயமாக அவரை இதில் ஈடுபடுத்தினார்.
மறுநாள் விடிந்ததும், சிறுவன் வீட்டிற்கு சென்று நடந்த அனைத்தையும் தனது தாயிடம் கூறினார். தாயார், திக்வெல்ல பொலிஸில் சென்று புகார் அளித்ததை தொடர்ந்து பொலிஸார் சந்தேக நபரை கைது செய்தனர்.
இணையவழி கற்கையில் ஈடுபடும் மாணவர்களின் நலனில் பெற்றோர் அக்கறை காண்பிக்க வேண்டியதையே இந்த சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.
Post a Comment