மாத்தளையில் 16 வயது சிறுவனின் உயிரை பறித்த மரம்.
மாத்தளை பகுதியில் 16 சிறுவன் மீது மரம் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாத்தளை பொலிஸ் பிரிவில் உன்னஸ்கிரிய பிரதேசத்தில் மரமொன்றை வெட்டுவதற்கு உதவி செய்து கொண்டிருந்த 16 வயது சிறுவன் மீது மரம் விழுந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
உன்னஸ்கிரிய, எல்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Post a Comment