Header Ads

test

கொவிட் தொற்றால் புதுக்குடியிருப்பில் 13 பேர் மரணம்.

 கொரோனா தொற்று தாக்கத்தால் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசம் கடுமையான பாதிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் புதுக்குடியிருப்பு பகுதியில் இதுவரை கொரோனாவால் 13 பேர் உயிரிழந்தமை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நாளாந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 3 நாட்களில் மாத்திரம் 04 மரணங்கள் பதிவாகியுள்ளது.

முல்லைத்தீவில் 53 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன்  புதுக்குடியிருப்பில் மாத்திரம் 27 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


No comments