இலங்கையை ஆக்கிரமித்துள்ள கொரோனா மரணங்கள்.
இலங்கையில் நேற்றைய தினம் மாத்திரம் 216 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்தோர் எண்ணிக்கை 8,991 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இந்நாட்டு மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 435,007 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 371,992 ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment