சற்றுமுன் வெளிவந்த நாடு முழுவதுமான பயணத்டை தொடர்பிலான அறிவித்தல்.
இன்று முதல் நாடு முழுவதிலும் புதிய சட்டம் அமுலுக்கு வருகின்றதாகவும், அதன்படி மாகாணம் விட்டு மாகாணம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எனினும் அத்தியாவசிய தேவை மற்றும் சுகாதாரம், பாதுகாப்பு கடமைகளுக்கு செல்வோருக்கு இந்த சட்டம் அனுமதியளிக்கின்றதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவை மேற்கோள்காட்டி டெய்லி மிரர் ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதேபோல, திருமண நிகழ்வுகளில் 50 பேர் மாத்திரமே பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதேவேளை இதற்கு முன்னர் இந்த எண்ணிக்கை 150ஆக அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இந்த புதிய சட்டங்கள் அடங்கிய அறிவிப்பு இன்று மாலை வெளிவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment