ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி வெளியிட்ட புதிய தகவல்.
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து நீடிப்பதா? அல்லது தளர்த்துவதா? என்ற தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது தொடர்பில் உடனடியாக எந்த தீர்மானங்களையும் எட்ட முடியாது என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியே இந்த தீர்மானம் எட்டப்படும்.
Post a Comment