இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் குடியுரிமை.
இலங்கை அகதிகள் தங்களுக்கு இந்திய குடியுரிமை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தால், அதை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை இயக்குநர் ஜெசிந்தா லாசரஸ் உறுதி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் வாழ்க்கைத்தரம், அடிப்படை வசதிகள் குறித்து அறிய பல்வேறு அகதிகள் முகாம்களிலும் ஜெசிந்தா லாசரஸ் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமை ஜெசிந்தா நேற்று பார்வையிட்டார்.
பின்னர் இலங்கை அகதிகள் வசிக்கும் வீடுகளுக்குச் சென்று அங்குள்ளவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். தங்களுக்கு இந்திய குடியரிமை வழங்க வேண்டும், வசிப்பிட பகுதிகளில் போதுமான குடிநீர், மின் விளக்கு, சாலை வசதி, வீடு, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பெரும்பாலனவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
Post a Comment