Header Ads

test

நாட்டில் ஏற்படவுள்ள கனத்த மழை.

 இலங்கையின் வானிலையில் இன்று, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.

ஏனைய இடங்களில் இயல்பான வானிலை நிலவும். மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவு, வடக்கு, வட மத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் மணிக்கு 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இதேவேளை, சூரியன் இன்று இலங்கையின் மரிச்சுக்கட்டி, தந்திரிமலை, மதவாச்சி மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் பகல் 12.10 மணியளவில் நேராக உச்சம் கொடுக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.


No comments