Header Ads

test

யாழில் சவப்பெட்டியுடன் நபர் ஒருவர் போராட்டம்.

 யாழ்.வலிமேற்கு பிரதேசசபையின் முன்பாக சபையின் முன்னாள் காவலாளியான இராதாகிருஷ்ணன் சிவகுமார் இன்று காலை சவப்பெட்டியுடன் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

தனக்கான நீதி வேண்டி போராட்டத்தி ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்ட குறித்த நபர்,

நிரந்தர ஊழியரான தன்னை, கடந்த 2015ம் ஆண்டு பணி இடைநீக்கம் செய்துள்ளதாகவும், 15 மாதங்களின் பின்னர் விசாரணைகள் எதுவுமின்றி எனக்கு மீண்டும் வேலையினை கொடுக்கப்பட்டதாகவும் கூறிய அவர். அதன் பின்னர் மது போதையில் கடமையில் இருந்ததாக கூறி கடந்த 2018 ஆம் ஆண்டு தன்னை வேலையில் இருந்து பணிநீக்கம் செய்ததாகவும் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், இதுதொடர்பாக பிரதேச சபையுடன் முரண்பட்டபோது வட்டுக்கோட்டை பொலிஸார் தன்னை அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதாகவும், அதன்பின்னர் பொலிஸார் தன்னை நீதிமன்றத்தை நாடுமாறு கூறியிருந்த அடிப்படையில் தாம் நீதிமன்றத்தை நாடியபோதும் பிரதேச சபை நீதிமன்றத்துக்கு சரியான முறையில் சமுகமளிப்பதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனால் தான், பிரதேச சபையின் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்கள் அல்லது சட்டத்தரணிகள் அல்லது சமாதான நீதவான் முன்னிலையில் தனது பிரச்சினைகளை விசாரணை செய்யுமாறு கூறியபோதும், பிரதேசசபை அந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை மூன்று வருடங்கள் நான் விசாரணைகள் எதுவுமில்லாமல் வேலையும் இல்லாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்த அவர், மன விரக்தி அடைந்த நான், எனக்கான நீதியை வேண்டி, பிரதேச சபையின் முன்னால் சவப்பெட்டியுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.





No comments