வடக்கில் தொடரும் கொவிட் மரணங்கள்.
கொரோனா தொற்றால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 பேருமாக 10 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். அதன்படி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஐவர் உயிரிழந்தனர்.
அவர்களில் யாழ்ப்பாணம் மருதடி ஒழுங்கையைச் சேர்ந்த 75 வயது பெண், சங்கானையைச் சேர்ந்த 79 வயது ஆண், சுன்னாகத்தைச் சேர்ந்த 65 வயது ஆண், கொக்குவிலைச் சேர்ந்த 82 வயது பெண், சாவகச்சேரியைச் சேர்ந்த 46 வயது ஆண் ஒருவருமாக ஐவர் உயிரிழந்தனர்.
இவர்கள் தவிர, யாழ்ப்பாணம் மாநகர மருத்துவ அதிகாரி பிரிவில் 68 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார்.
அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று நால்வர் தொற்றால் உயிரிழந்தனர்.
ஒட்டுசுட்டான் - பெரியசாளம்பன் பகுதியைச் சேர்ந்த 68 வயது ஆண், சிலாவத்தை மாதிரி கிராமத்தைச் சேர்ந்த 42 வயது பெண், கணுக்கேணியைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர், முள்ளியவளையைச் சேர்ந்த ஒரு வர்த்தகர் ஆகியோருமே இவ்வாறு கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
Post a Comment