Header Ads

test

கொவிட் தொற்றாளர்களுக்கு நிவாரணியாக மாறியுள்ள பரசிற்றமோல்.

கோவிட் தொற்றுக்கு இலக்காகிய நிலையில் காய்ச்சல் அல்லது உடல் வலி இருப்பவர்கள் இரண்டு பரசிட்டமோல் மாத்திரைகளை ஒரு நாளைக்கு மூன்று நேரம் ஆறு மணித்தியாலங்களுக்கு ஒருமுறை எடுத்துக் கொள்ள வேண்டும் என மருந்தியல் பேராசிரியர் வைத்தியர் பிரியதர்ஷனி கலப்பத்தி தெரிவித்துள்ளார்.

 கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் இன்றி, எவ்வித நோய் எதிர்ப்புச் சக்தி மருந்துகளையும் வழங்க வேண்டாம் எனவும் 

கோவிட் நோயை கட்டுப்படுத்துவதற்கு இதுவரை எவ்விதமான மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவே கட்டுப்படுத்துவதற்கு தற்போதுள்ள மிகச் சிறந்த தீர்வு தடுப்பூசியேயாகும். அத்துடன், மருத்துவ ஆலோசனையின்படி விட்டமின் வகைகளை எடுத்துக் கொள்ள  வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோவிட் தொற்றுள்ளவர்கள் காய்ச்சல் அல்லது உடல் வலி இருந்தால் இரண்டு பரசிட்டமோல் மாத்திரைகளை ஒரு நாளைக்கு மூன்று நேரம் ஆறு மணித்தியாலங்களுக்கு ஒருமுறை எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் சிறிய குழந்தைகளின் எடைக்கு ஏற்ப பரசிட்டமோல் கொடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.



No comments