ஆபாய கட்டத்தை நெருங்கியுள்ள இலங்கை.
இலங்கை முழுதும் திரிபடைந்த டெல்டா வைரஸ் பரவியுள்ளமையால் அதிகளாவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக சுகாதார துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அண்மைய நாட்களில் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர் டெல்டா தொற்றாளர்கள் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவன்தர தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரி பரிசோதனைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
94 மரபணு மாதிரிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட பரிசோதனைகளில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பபட்டுள்ளது.
அவர்களில் அதிகமானோர் டெல்டா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள். இது தொடர்பான முக்கிய அறிக்கை ஒன்று சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment