பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துநர்களை கைது செய்ய விசேட நடவடிக்கை.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி, பயணிகளை அழைத்து செல்லும் பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துநர்களை கைது செய்ய இன்று முதல் விஷேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோர் மற்றும் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ் வண்டிகளை அவதானித்து நடவடிக்கை எடுக்குமாறு, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, பொலிஸ் மாஅதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கையை பொலிஸ் மாஅதிபருக்கு கடிதமொன்றின் ஊடாக, இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ளார்.
அதற்கமைய , தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படும் பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துநர்களை இன்று முதல் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
Post a Comment