வாழ்க்கையில் நடைபெறும் விடயங்களை மகிழ்ச்சியாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்பு.
எதிர்பாராத நிலையில்தான் எனது அமைச்சுப் பதவியை ஜனாதிபதி மாற்றியமைத்தார் என முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போது போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பவருமான பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் இன்று மாலை நடந்த நிகழ்வில் இறுதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைக் தெரிவித்தார்.
வாழ்க்கையில் நடைபெறும் இவ்வாறான விடயங்களை மகிழ்ச்சியாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும்
இன்னும் 04 வாரங்களில் தடுப்பூசிப் பணிகளை முழுமைப்படுத்திக் கொண்டால் நாட்டை தற்போதைய பயங்கரமான சூழ்நிலையிலிருந்து மீட்டுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment