Header Ads

test

சீனாவை மிரட்டும் புதியவகை வைரஸ்.

 சீனாவின் கிழக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் புதிய டெல்டா வைரஸ் வேகமாக பரவி வருவதையடுத்து அந்நாட்டின் ஏற்றுமதித்துறை பாதிப்படைந்திருக்கிறது.

உலகளாவிய ரீதியாக முழு அடைப்பு நிலை தளர்த்தப்பட்டு வரும் நிலையில் அதனால் பயன்பெற முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீன நகரங்களிலும் தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதிகளிலும் டெல்டா பரவும் வேகம் அதிகரித்திருப்பதால் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை மூடியுள்ளதோடு இலட்சக்கணக்கானோரை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
 
இதனால் தொழிற்சாலைகளும் வர்த்தக நிலையங்களும் தமது பணிகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

கடந்த மாதம் கடும் மழையும் வெள்ளமும் மத்திய சீனாவில் கைத்தொழில் நடவடிக்கைகளை ஸ்தம்பிக்கச் செய்திருந்தது.

வளர்ந்துவரும் ஆசிய நாடுகளில் கொவிட் பரவுதல் மோசமடைந்துள்ள நிலையில் பல நாடுகள் சீனாவிடம் பொருட்களைக் கொள்வனவு செய்ய முனைந்துள்ள நிலையிலேயே ஏற்றுமதி பொருளாதாரத்தில் சீனா தற்போது மந்த நிலையை எதிர்கொண்டுள்ளது.

வெளிநாட்டு ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கிய சமயத்தில் இவ்வாறு நேர்ந்தது கவலை அளிப்பதாக உள்ளது என கைத்தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உலகின் முன்னணி ஏற்றுமதி நாடான சீனாவின் ஜுலை மாத ஏற்றுமதி வருமானம் 51.54 பில்லியன் டொலர்களாக இருக்குமென மதிப்பிடப்பட்டிருந்த போதும் 56.58 பில்லியன்களாக அது அதிகரித்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments