இலங்கைக்கான முதலாவது நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் மைக்கல் எட்வட் அபல்டன் அவர்களை சந்தித்த பிரதமர் மஹிந்த ராஜபஷ.
இலங்கைக்கான முதலாவது நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் மைக்கல் எட்வட் அபல்டன் அவர்கள் நேற்று (11) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்தித்தார்.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்த தனது விருப்பத்தை அபல்டன் பிரதமரிடம் தெரிவித்தார்.உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி நாடான நியூசிலாந்து இலங்கையின் பால் உற்பத்தி துறையை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பம் மற்றும் அறிவை பகிர்ந்து கொள்ளவும் அபல்டன் விருப்பம் தெரிவித்தார்.
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷவுடன், இதற்கு முன்னர் மேற்கொண்ட கலந்துரையாடல் குறித்து நினைவுகூர்ந்த உயர் ஸ்தானிகர் விளையாட்டின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை உறுதிப்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
நட்பு நாடாக நியூசிலாந்து அரசாங்கத்துடன் எதிர்காலத்திலும் ஒத்துழைப்புடன் செயற்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய பிரதமர், இலங்கைக்கான நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் என்ற ரீதியில் வெற்றிகரமாக சேவையாற்ற எட்வட் அபல்டன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
குறித்த சந்திப்பில் பேராசிரியர் G.L.பீரிஸ், இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், பிரதமர் அலுவலக பணிக்குழாம் பிரதானி யோஷித ராஜபக்ஷ, இலங்கைக்கான நியூசிலாந்து பிரதி உயர் ஸ்தானிகர் அன்ட்ரூ ட்ரவெலர், முன்னாள் நியூசிலாந்து கொன்சியூலர் சேனக த சில்வா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
Post a Comment