அம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள சினோவாக் தடுப்பூசி தொழிற்சாலை.
அம்பாந்தோட்டையில் கோவிட் எதிர்ப்பு தடுப்பூசிகளை தயாரிக்கும் தொழிற்சாலையொன்று அமைக்கப்படவுள்ளதாக தெரிவிப்படுகின்றது.
இதன் பிரகாரம் சீனாவின் ஒரு மருந்து நிறுவனமொன்றினால் இத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் மூலம் சீனாவும், இலங்கையும் தங்கள் இருதரப்பு "தடுப்பூசி இராஜதந்திரத்தை" விரிவுபடுத்தவுள்ளதாகவும்
புதிய தொழிற்சாலை ஒரு உடன்படிக்கையின் கீழ் அமைக்கப்படும் என சீனாவுக்கான இலங்கை தூதர் பாலித கொஹேன தெரிவித்தார்.
இவ் உடன்படிக்கை இலங்கையின் அரச மருந்துக் கூட்டுத்தாபனம் மற்றும் சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனமான சீனாவின் சினோவாக் பயோடெக் ஆகியவற்றுக்கு இடையில் செய்துகொள்ளப்படவுள்ளது.
இதன்படி அம்பாந்தோட்டையில் உள்ள பிரத்தியேக மருந்து உற்பத்தி மண்டலத்தில் அமைக்கப்படும் என இலங்கை தூதர் தெரிவித்தார்.
Post a Comment