நாளைய எம் தலைவர்கள் என்ற எம் சந்ததி நடுவீதியில் நிற்கிறது - பளையூர் பரா.
கால மாற்றம்
-------------------------
நான் தவழ்ந்தெழுந்த பூமித்தாய் நாவரண்டு கிடக்கிறது.
வானம் பூத்து பெய்தமழை
காலம் தப்பிப் பெய்கிறது.
கோலம் மாறி கொடும் வெய்யில் சுட்டெரித்து எறிக்கிறது.
காலையிலே கேட்கும் அயலவனின் மண்வெட்டிச் சத்தம் ஓய்ந்து அது இன்று
கனடாவின் எங்கோ ஓர் மூலையில் மௌனித்திருக்கிறது.
விளைநிலங்களில் விளைச்சல் பல விட்டெறிந்து போயுள்ளது.
மட்டற்ற சுவைதந்த உணவெலாம் கட்டுக் கதையாக மாறியது.
அட்டம் அயலின்றி புதிய முகங்களுடன் பொழுது போகிறது.
ஆடிய கூத்துக்கள் எதுவுமின்றி எம் ஆலயங்கள் கூட்டமெதுவுமின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது .
நாளைய எம் தலைவர்கள் என்ற எம் சந்ததி நடுவீதியில் நிற்கிறது.
கோடும் கச்சேரியும் வாழ்வென்று சிலர் நாளும் அலைகின்றனர்.
சாலையோர விபத்துகள் வாலிபர்கள் உயிரைக் குடிக்கிறது.
மதுவும் கூத்துக்களும் மலிந்தே போயுள்ளது.
கோரோனாவும்
தன்பங்காய் பசிதீர்த்துக் கொள்கிறது.
கல்விக் கூடங்களில் காக்கைகள் கூடுகட்டி வாழ்கிறது .
காலம் மாறுமென்ற கனவு மட்டும் கண்ணீரைத் துடைக்கிறது.
பளையூர் பரா.
Post a Comment