Header Ads

test

பால்மா இறக்குமதி தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த வரி முழுமையாக நீக்கம்.

இறக்குமதி செய்யப்படும் பால் மா மீது விதிக்கப்பட்டிருந்த வரி முழுமையாக நீக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (10) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது இதன்போதே அமைச்சரவை பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான  விடயங்களை ஆராய்ந்து உள்ளூர் சந்தையில் பால்மா விலையை அதிகரிக்காமல், தற்போதுள்ள பால்மா இறக்குமதிக்கான வரி விகிதத்தை திருத்தம் செய்வதன் மூலமோ அல்லது வேறு பொருத்தமான நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமோ போதியளவு பால்மாவை உள்ளூர் சந்தையில் விநியோகிப்பதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி அமைச்சருக்கு அதிகாரம் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments