வரலாற்று சாதனை படைத்த யாழ்.போதனா வைத்தியசாலை.
யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் வரலாற்றிலேயே முதல் தடவையாக சிறுநீரகம் பொருத்தும் சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சத்திர சிகிச்சையானது கடந்த 18-ம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா சூழலுக்கு மத்தியிலும் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மூளை இறந்த நிலையிலிருந்த இளம் நோயாளி ஒருவரின் சிறுநீரகத்தை இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு பொருத்தியே குறித்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
மேலும் மூளை இறந்த நிலையிலிருந்த இளம் நோயாளியின் சிறுநீரகத்தை தாமாக முன்வந்து தானம் செய்த குறித்த நோயாளியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு யாழ்.போதனா வைத்தியசாலை சமூகம் நன்றியினை தெரிவித்துள்ளது.
Post a Comment