எதிர் வரும் வாரம் ஊரடங்கு நீக்கப்படலாம் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு.
தற்போது நாடு முழுவதிலும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 30மம் திகதியுடன் நீக்கப்படலாம் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாட்டை முழுமையாக முடக்கி கோவிட் தொற்றை கட்டுப்படுத்த முடியாதென்கின்ற நிலைப்பாட்டில் உலக நாடுகள் இருப்பதாக தெரிவித்த அமைச்சர் , அதனையே தாங்களும் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் கடந்த 20ஆம் திகதி முதல் வருகின்ற 30ஆம் திகதி வரை அமுலில் உள்ள போதிலும், கொழும்பு நகரில் வழமைபோல சில இடங்களில் வாகன நெரிசல்கள் ஏற்பட்டுள்ளதுடன் சிறிய கடைகள் முதல் பல்வேறு வணிக நிலையங்களிலும் ஊரடங்குச் சட்டத்தை மீறுகின்ற வகையிலான நடவடிக்கை இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment