Header Ads

test

ரயிலில் பயணம் செய்யும் ஊழியர்களுக்கான முக்கிய அறிவித்தல்.

 அலுவலக அடையாள அட்டை அல்லது உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் மாகாணங்களுக்கு இடையேயான ரயில் சேவைகளைப் பயன்படுத்த முடியாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த ஆவணங்களை எந்த நேரத்திலும் பரிசோதனை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் வேலைக்கு செல்வோருக்கான ரயில் பயணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments