Header Ads

test

எடுத்த காவடி இறக்கி வைக்க நேரமில்லாமல் சிலர் -முல்லைக்கவி தனுஜா.

 "சிறுவர் கதைப் பயணம்" 


உறுமீன் வரும்வரை காத்திருக்குமாம் கொக்கு... 

உற்ற நோய் வரும் வரை காத்திருந்து வந்த பின் 

சுற்றித்திரிய கொரோனா 

பிடித்துச்செல்லும் உணவாய்... 

பிடிபட்டு விடும் தூண்டல் மீன்கள் நாம்.... 

ஓடுகின்ற ஆற்றிலே மீன்கள் எல்லாம் போகுதென்று  

தானும் புறப்பட்டு போச்சுதாம் மீனும்... 

நட்புக்கள் எல்லாம் வலையிலே அகப்பட தப்பினோம் பிழைத்தோமென ஓடி வர

கொக்கின் வாயில் பிடியாகும் இரையாய் நிலமை..... 

குரங்கின் ஈரல் தின்ன திட்டம் போட்ட முதலையின் முதுகில் ஏறியிருக்கும் குரங்கின் நிலமை நம்மவர்க்கு.... 

எடுத்த காவடி இறக்கி வைக்க நேரமில்லாமல் சிலர்... 

கிடைத்த காவடியை தெருக்கூத்தில் பயன்படுத்துவோர் பலர்.... 

சிங்கத்தின் கலியாணத்தில் விருந்து சாப்பிட சென்ற முயல்களின் கதையாய் இன்றைய நிலமை.... 

குளிர்காலத்தில் கோடை தேடி வந்த நாடோடிப் பறவைகள் கூடமைத்த கதையாய் இந்தப் பயணம்... 

பறவைகளும் மிருகங்களும் கூட்டம் போட்டு நாட்டை காடாக்கிய கதையாய் செல்லும் எம்முடைய பயணம்... 

போகும் பயணம் கைலாசம் என்றறிந்தும் ஆட்டம் போடும் கதையாய் இந்தப் பயணம்... 

மொத்தத்தில் சிறுவர் கதையாய் நம்முடைய பயணம்... 

எங்கே வாகனம் நிற்கிறதோ அங்கே தரித்துக் கொள்வோம்.... 

முல்லைக்கவி தனுஜா.


No comments